வேலுகுமார் - மனோ முறுகல் : வெளிவந்த இருவர் தரப்பு நிலைப்பாடு
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் வெளியேற்றப்படவில்லை என கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் அவர் நடுநிலை வகித்ததன் காரணமாக கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இருந்து இடைநிறுத்தம்
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ''கண்டி மாவட்டத்துக்கு தமிழ் பிரதிநிதித்துவம் மிக முக்கியம். சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இந்த பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் எனக்கு கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அவ்வாறான தமிழர் தரப்பிலான பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய நாம் இடமளிக்க போவதில்லை.
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இல்லையென்றாலும் வேலுகுமார் சுயாதீனமாக செயல்படலாம்” என்றார்.
வேலுகுமாரின் அரசியல் பயணம்
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி அல்லது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து தான் அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளியாகும் தகவலை வேலுகுமார் நேற்று நிராகரித்திருந்ததோடு தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைந்து செயற்படப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
