யாழ். கந்தர்மடத்தில் புகையிரத விபத்து!! உடல்சிதறி பலியான நபர் (படங்கள்)
Jaffna
Accident
By Vanan
கந்தர்மடத்தில் புகையிரத விபத்து
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உடல்சிதறி பலியாகியுள்ளார்.
கந்தர்மடம் - ஆத்திசூடி ஆலயத்திற்கு அருகில் இருந்த புகையிரத கடவையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இவ்விபத்தில் மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


