பாலியல் காணொளியில் சிக்கிய தொழிலதிபர் - பதிவு செய்து மிரட்டிய கும்பல்
இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் நிகழ்நிலை (online) பாலியல் காணொளி அழைப்பில் சிக்கி பாரிய தொகையை இழந்துள்ளார்.
குறித்த தொழிலதிபர் குஜராத் பகுதியை சேர்ந்தவர் எனவும், குறித்த அழைப்பின் மூலம் ரூ. 2.69 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், ''புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை நடத்தி வரும் பாதிக்கப்பட்ட தொழிலதிபருக்கு, கடந்த ஆண்டு ஓகஸ்ட் 8 ஆம் திகதி மோர்பியைச் சேர்ந்த ரியா ஷர்மா என்று தன்னை அடையாளப்படுத்திய பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
பாலியல் ரீதியான காணொளி
அப்பெண் அடிக்கடி அவருடன் பாலியல் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். தொழிலதிபரும் பரவரசமாக அப்பெண் சொல்வதையெல்லாம் செய்ய, திடீரென அழைப்பை துண்டித்துள்ளார்.
குறித்த பெண் தொழிலதிபரின் செயல்களை காணொளியாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து, தொழிலதிபரின் பாலியல் ரீதியான காணொளியை பரப்பப்படாமல் இருக்க அவரிடம் முதலில் 50000 ரூபாயை பெற்றுள்ளார்.
சில நாட்களுக்குப் பின் , தொழிலதிபருக்கு டெல்லி காவல்துறையின் உயரதிகாரி என்று கூறி அழைப்பு வந்துள்ளது. அந்த காணொளி பதிவு இப்போது தன்னிடம் இருப்பதாகக் கூறி 3 இலட்சம் பெற்றுள்ளார்.
வழக்கைத் தீர்ப்பதற்கு
ஒகஸ்ட் 14 அன்று, டெல்லி காவல்துறை சைபர் பணியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மற்றொரு நபர், அந்த ரியா ஷர்மா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி ரூ.80.97 இலட்சத்தை பெற்றுள்ளார். இப்படி தொடர்ந்து அவர் பணத்தைச் செலுத்தினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மத்திய புலனாய்வு நிறுவனத்தை அணுகியதாகக் கூறி, அந்த வழக்கைத் தீர்ப்பதற்கு ரூ. 8.5 லட்சம் கேட்டு போலி சிபிஐ அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
பின்னர் டெல்லி உயர்நீதிமன்றம் என்றல்லாம் கூறி, டிசம்பர் 15 வரை தொடர்ந்து குறித்த குழுவினர் பணம் பரித்துள்ளனர்.
பணம் பறித்ததாக புகார்
#Gujarat A 68-year-old Gujarat businessman allegedly lost ₹ 2.69 crore in a 's*xtortion' trap, a police official said on Thursday.
— NewsCred (@NewsCredMedia) January 12, 2023
--No one has been arrested in the case so far and a probe was underway, he added.#GujaratCrime #GujaratModel #GujaratPolice #NewsCred pic.twitter.com/ZNafNVXRC2
பின்னர் வழக்கை முடித்துவிட்டதாகக் கூறப்பட்ட உத்தரவு தொழிலதிபரை சந்தேகத்திற்குரியதாக்கியது.
பின்னர் அவர் ஜனவரி 10-ஆம் திகதி சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தை அணுகி, 11 பேர் மீது ரூ.2.69 கோடியை மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தார்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.என தெரிவித்தனர்.