அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸை உருவக்கேலி செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க(US) தேர்தல் பிரச்சார கூட்டங்கள் சூடுப்பிடித்துள்ள நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கமலா ஹாரிஸை(Kamala Harris) விட தான் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பென்சில்வேனியாவில்(Pennsylvania) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் நவம்பர் மாதமளவில் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க தேர்தல்
இந்நிலையில், இருவரும் தேர்தல் பிரச்சாரகூட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர். அதிலும், டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரகூட்டங்களில் கமலா ஹாரிசின் மீது பலவகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
அவர் தனது உரையில், "ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப் போல் நடந்துகொள்கிறார்.
அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவர் அழகானவர், ஆனால் நான் அவரை விட அழகாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |