ட்ரம்ப்பின் வரி விதிப்பு: அநுர அரசாங்கத்திற்கு துணையாக வந்த நாமல்
இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவால் இலங்கைப் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒரே காரணத்திற்காக ஒன்றிணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வரிகள் ஆடைத்தொழில் போன்ற முக்கிய துறைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வேலையின்மை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை இன்னும் மீண்டு வருவதால், அரசாங்கத்தின் ஏற்றுமதி இலக்குகளை ஆபத்தில் ஆழ்த்துவது பொருளாதார மீட்சியை இன்னும் கடினமாக்கும் என்று நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
மேலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை என்றால், அரசாங்கம் வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி, ஏற்றுமதி வருவாயைப் பராமரிக்க மாற்றுத் தீர்வுகளைத் தேட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்போது, “இந்த மிகப்பெரிய தடையை நாம் எதிர்கொள்ளும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட துறைகளை ஆதரிக்க வேண்டிய நேரம் இது" என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 20 நிமிடங்கள் முன்
