இராணுவ அதிகாரியென தெரிவித்து மாணவர்களிடம் பணம் பறிப்பு
கண்டி பிரதான தபால் நிலையத் துக்கு அருகில் பாடசாலை மாணவர்களை மிரட்டி பணம் பறிக்க முற்பட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (02) காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தம்மிடம் சந்தேகநபர் பணம் பறிக்க முற்பட்டமை தொடர்பாக சுற்றுலா காவல்துறையிடம் மாண வர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.
தானொரு இராணுவ அதிகாரியென
இந்த மாணவர்களிடம் தானொரு இராணுவ அதிகாரியென சந்தே கநபர் கூறியதுடன், அவர்களை மிரட்டி இந்தச் சந்தேகநபர் பணம் பறிக்க முற்பட்டமை தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சனி, ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கு வரும் பாடசாலை மாணவர்களை சந்தே கநபர் மிரட்டி ஏற்கெனவே பணம் பறித்துள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனை
இவ்வாறு திருடிய பணத்தை சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு செலவிட்டு வந்ததாக
விசாரணையில் தெரியவந்துள்ளதா
கவும், காவல்துறையினர் தெரிவித்தனர்
