பேருவளையில் வெள்ளைவானில் இருவர் கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Beruwala
By Sumithiran
வெள்ளை வான்களில் கடத்தல்
பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடத்திச் செல்லப்பட்டவர்கள் மீன்பிடி கப்பல் உரிமையாளர் மற்றும் மீனவர் என தெரியவருகிறது.
காவல்துறையில் முறைப்பாடு
இவர்களில் ஒருவரது மனைவி கடந்த 20ஆம் திகதி தனது கணவர் வெள்ளை நிற வானில் ஏறியதாகவும் அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை எனவும் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மகன் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக காணாமல் போன மற்றையவரின் தாய் தெரிவித்துள்ளார்.

