பிள்ளையானின் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்படிருந்த குண்டுகள் மீட்பு
Batticaloa
Sivanesathurai Santhirakanthan
Puducherry Police
By Jaso
பிள்ளையானின் அலுவலகத்தில் குண்டுகள்
பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏறாவூர் பகுதியில் நடத்தி வந்த அலுவலகத்தின் கூரையில் இருந்து இரண்டு கைக்குண்டுகளை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்படும் நிலையில் உள்ள குண்டுகள் என ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்பு
இந்த வீட்டை அண்மையில் வாங்கியவர் கூரையை பழுது பார்க்கச் சென்றவேளை கூரையின் சீலிங்கிற்குள் இவை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குண்டுகளை எடுத்துச் சென்றதாக தெரியவருகிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி