நீராட சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட அவலம்!
Sri Lanka
Accident
Death
By pavan
நவகமுவ - அக்பார்வத்தை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்சியாக பெய்து வரும் அடை மழைக்காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில் நீராடிய போதே குறித்த சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களின் சடலம்
14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
