ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரன் சகோதரிக்கு நடந்த அவலம்!
மத்துரட்ட காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெட்டயாப்பத்தன வடுவா ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துரட்ட கெட்டயாபத்தனை கிராமத்தில் வசித்த டப்ளியூ. ஜி. அசேல ஹிதுவர (வயது 12) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இவரின் சடலம் சம்பவ தினம் இரவு 09.30 மணியலவில் மீட்க்கப்பட்டுள்து.
மாயமான சகோதரி
அதேநேரம் நீரில் மூழ்கி மாயமான சகோதரி இன்று மாலை சடலமாக மீட்கபபட்டுள்ளதாக மத்துரட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியின் சடலங்கள் பிரேத பரிசோதணைக்காக ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
