குளத்தில் நீராட சென்ற இரு சிறுவர் நீரில் மூழ்கி பலி! வவுனியாவில் சோகம்
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் உட்பட நால்வர் ஈரப்பெரியகுளத்தில் நீராட சென்றுள்ளனர்.
குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நால்வரில் இருவர் அங்கு நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கினர் எனினும் அவர்கள் ஒருவாராக குளத்தினுள் இருந்து வெளியேறியிருந்தனர்.
ஏனைய இருவரையும் பொதுமக்களும் காவல்துறையினரையும் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அனுப்பியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியா - தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மதிக்கதக்கவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
