குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த உதய கம்மன்பில..!
பாரியளவில் பண மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் திலினி பிரியமாலிக்கு தாம் பணம் வழங்கவில்லை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மோசடியாளரான திலினி பியாமலிக்கு பணம் வழங்கியவர்கள் என போலியான பெயர்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அதில் அவரது பெயரும் இருப்பதாகவும் உதய கம்மன்பில டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வில் முறைப்பாடு
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நிதி முறைக்கேடு தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட அரசியல்வாதிகள் குறித்து ஆராயுமாறு கோரி அவர் இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தமது ஆவணங்கள் சிலவற்றை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
