தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

Tamils Ilankai Tamil Arasu Kachchi United Kingdom Sri Lanka Presidential Election 2024
By Thulsi Sep 14, 2024 04:36 AM GMT
Report

இலங்கையில் (srilanka) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) பிரித்தானியவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என அறிவித்தல் வெளியாகி உள்ளது. 

இலங்கைத் தமிழரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி விடயம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது.

மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள்

அக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு! | Uk Itak Also Supports The Tamil General Candidate

எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சியால் சிதறடிக்கப்படும் தமிழர்களின் வாக்குகள்

பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சியால் சிதறடிக்கப்படும் தமிழர்களின் வாக்குகள்

பெரும்பான்மையினருடைய விருப்பம்

இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு! | Uk Itak Also Supports The Tamil General Candidate

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தனது அனைத்து வகையான தேசியக் கட்டுமானங்களையும் இழந்து, தமிழ்த் தேசியம் சிதைந்து சீரழிவுக்கு உட்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுவோர் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு தேசியதிரட்சி பெற வைப்பதற்கான ஒரு நடைமுறையான செயல் திட்டம் ஜனாதிபதித் தேர்தல் என்ற வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் தமது தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுவதற்கும், பிரிந்து போய் இருக்கின்ற கட்சிகளையும், மக்களையும் இணைப்பதற்கும், தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்குமாக, மக்கள் பேரவா கொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும்,

தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தி பறைசாற்றுவதற்கும், தமிழ் மக்களின் தேசிய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயல்முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்க வைத்து, தேசியத்தை மீள் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.

தமிழர் பகுதியை முகாமிடும் தென்பகுதி வேட்பாளர்கள்: அரியநேந்திரன் குற்றச்சாட்டு

தமிழர் பகுதியை முகாமிடும் தென்பகுதி வேட்பாளர்கள்: அரியநேந்திரன் குற்றச்சாட்டு

உறுதியான நிலைப்பாட்டை

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஐ. இராச்சிய கிளையானது, ஏற்கனவே தனது 26மே 2024 மாதாந்த பொது கூட்டத்தில் எடுத்த முடிவான தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தாயகத்தின் தாய் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு( ITAK HO 30 Martyn Jaffna Sri Lanka) அறிவித்துள்ளோம்.

இப்போது அந்த முடிவை ஊடக வாயிலாக எம்மின மக்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழ் மக்கள் எடுத்த சிறந்த தீர்மானம்

விடுதலைப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழ் மக்கள் எடுத்த சிறந்த தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024