கோ பூஜையில் ஈடுபட்ட பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்..!
பிரித்தானிய பிரதமர் வேட்பாளராக உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி லண்டனில் உள்ள பக்திவேதாந்தா மனோர் கோவிலில் கோ பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கோ பூஜை நிகழ்வில் ரிஷி சுனக் பங்குபெற்றிய காணொளிகள் சுமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரப்படுகின்றது.
போரிஸ் ஜான்சன் பதவி விலகில்
பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதால்
அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணிகளள் தீவிரமடைந்துள்ளது.
இதற்கான தேர்தல் பல சுற்றுகளாக நடந்தன. இதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் பிரிட்டனை சேர்ந்த வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் இறுதிப்போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர்களை சந்தித்த ரிஷி சுனக்
இதேவேளை, கடந்த வாரம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து ரிஷி சுனக் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் தொடர்பிலும் ரிஷி சுனக் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

