பிரித்தானிய நிரந்தர குடியுரிமை: அகதிதஞ்சம் பெருவோருக்கு அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் அகதி தஞ்ச கோரிக்கைகளை கையாளும் புகலிடக் கொள்கைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த அறிவிப்பு நாளை (17) வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், நிலையில் அதில் முக்கிய மாற்றங்கள் இலங்கை பூர்வீக ஏதிலிகளுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகின்றது.
புதிய திட்டம்
குறித்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

இந்தநிலையில், அந்த மாற்று திட்டங்களில் புகலிடம் கோருபவர்களுக்கு தானாவே கிட்டிக்கொள்ளும் பல சமூக நலன்புரிய சலுகைகள்(பெனிபிற்) முடிவுக்கு கொண்டுவரப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை விட புதிய திட்டத்தின் அடிப்படையில் இனிமேல் பிரித்தானியாவில் ஒருவருக்கு அகதிதஞ்சம் வழங்கப்பட்டாலும் அவர் அங்கு நாட்டில் நிரந்தரமாக குடியேறும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆகக்குறைந்தது 20 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகவுள்ளது.
புகலிடம் கோரியவர்கள்
அதாவது அகதித் தஞ்சம் வழங்கப்படுவர்கள் இனிமேல் தற்காலிகமாக மட்டுமே பிரிதானியாவில் தங்க அனுமதிக்கப்படுவதுடன் அவர்களின் அகதி நிலை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவர்களின் சொந்த நாடுகள் பாதுகாப்பாகக் கருதப்பட்டால் அவர்கள் திரும்பி அனுப்படும் வகையில் திட்டங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் புகலிடம் கோரியவர்கள் தமது குடும்பங்களை பிரித்தானியாவுக்குள் அழைப்பதற்கான விதிகள் மிக கடுமையாக மாறவுள்ளன.

அத்தோடு, வழங்கப்படடும் சில சலுகைகளும முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் அங்கிகரிக்கபட்ட அகதி ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தனக்குரிய பி.ஆர் எனப்படும் நிரந்தரவதிவிட உரிமைய பெற முடியும்.
நிரந்தர வதிவிடம்
புதிய திட்டத்தில் இந்த ஐந்து வருடகாலம் இரண்டரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு அதன்பின்னர் குறிப்பிட்ட ஏதிலியின் நிலை மதிப்பாய்வு செய்யப்படும்.
இதனால் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கு எடுக்கும் காலம் இனி ஐந்து ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக நீட்டிகப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவில் மிகவும் கடினமான புகலிடம் மற்றும் குடியேற்ற திட்டங்கன கொண்ட டென்மார்க் பாணியில் இந்த திட்டங்கள் வரவுள்ள நிலையில் இவை அகதிகள் அமைப்புகளின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
புதிய திட்டங்கள் தேவையற்ற கடுமையான நடவடிக்கைகள் என அகதிகளுக்குரிய அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்