ஐரோப்பாவில் வெம்மை அக்னித்தாண்டவம் - பிரித்தானியா, பிரான்சில் தொடரும் எச்சரிக்கைகள்
By Vanan
வெப்ப அலைக்குள் ஐரோப்பா
ஐரோப்பா இந்த வாரம் மிகக் கடுமையான ஒரு வெப்ப அலைக்குள் சிக்கும் நிலையில் காட்டுத் தீ காரணமாக பிரான்ஸில் தென் மேற்கு பகுதியிலிருந்து 16 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின், குரோஷியா, மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளில் பரவிய காட்டுத் தீயினால் பிரான்ஸில் தென் மேற்கு பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
காட்டுத்தீ பரவும் அபாயம்
போத்துக்கல் மற்றும் ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் வெப்பநிலையானது சாதனைமிக்க மட்டமான 41 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்றும் நாளையும் அதீத வெப்பம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை வானிலை அவதான மையம் விடுத்துள்ளது.
