உக்ரைனின் அதிரடி முடிவு :அடுத்து நடக்கப்போவது என்ன..!

Russo-Ukrainian War Ukraine Russia
By Jaso Jan 01, 2025 10:35 PM GMT
Report

தங்கள் நாடு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷ்ய எரிவாயு விநியோகிக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தை உக்ரைன்(ukraine) புதுப்பிக்காத காரணத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகம் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

ஒப்பந்தத்தை உக்ரைன் புதுப்பிக்காததால் அந்த நாடு வழியாக எரிவாயு விநியோகிக்க முடியாது என்று ரஷ்ய(russia) அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது.

தொடா்ந்து எரிவாயு கொள்முதல்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி மாதம் படையெடுத்தது. அதைக் கண்டித்து ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. எனினும், தங்களது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், அந்த நாட்டிலிருந்து தொடா்ந்து எரிவாயுவை கொள்முதல் செய்துவருகின்றன.

உக்ரைனின் அதிரடி முடிவு :அடுத்து நடக்கப்போவது என்ன..! | Ukraine Halts Transit Of Russian Gas To Europe

ஐரோப்பிய நாடுகளிடம் எரிவாயு விற்பனை செய்து ஈட்டும் பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் தயாரித்து தங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் கூறினாலும், தங்களுக்குத் தேவையான 40 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொள்முதல் செய்துவருகின்றன.

இந்த எரிவாயு போல்டிக் கடல் வழியாகச் செல்லும் குழாய்கள், பெலாரஸ், போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகள் வழியாகச் செல்லும் குழாய்கள் மூலம் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

ரஷ்ய மக்களுக்கு புடின் அளித்துள்ள உறுதிமொழி

ரஷ்ய மக்களுக்கு புடின் அளித்துள்ள உறுதிமொழி

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகும் அந்த நாடு வழியாக எரிவாயுவை விநியோகித்து ரஷ்யா பணம் ஈட்டிவந்தது. உக்ரைனும் ரஷ்ய எரிவாயு போக்குவரத்துக்காக கட்டணம் பெற்றுவந்தது.

 ஐந்தாண்டு ஒப்பந்தம் புதன்கிழமையுடன் முடிவு

இந்தச் சூழலில், ரஷ்ய எரிவாயுவை உக்ரைன் வழியாக விநியோகிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப்போவதில்லை எனவும், தங்கள் நாடு வழியாக ரஷ்ய எரிவாயு விநியோகிக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும் உக்ரைன் எரிசக்தித் துறை அமைச்சா் ஹொ்மான் ஹாலுஷென்கோ கூறினாா்.

உக்ரைனின் அதிரடி முடிவு :அடுத்து நடக்கப்போவது என்ன..! | Ukraine Halts Transit Of Russian Gas To Europe

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என்று பாராட்டிய அவா், இந்த நடவடிக்கையால் ரஷ்யா ஐரோப்பிய சந்தைகளை இழந்து பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இருந்தாலும், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஸ்லோவோக்கியா பிரதமா் ராபா்ட் ஃபிக்கோ, ‘உக்ரைனின் இந்த முடிவால் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும். ரஷ்யாதான் பாதிக்கப்படாத ஒரே நாடாக இருக்கும்’ என்று விமா்சித்தாா்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனர்த்தம் :அமெரிக்க தாக்குதல் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனர்த்தம் :அமெரிக்க தாக்குதல் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்.

உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டமை மோல்டோவாவைத்தான் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. பிற நாடுகள் மாற்று வழித்தடங்கள் மூலம் ரஷ்ய எரிவாயுவைப் பெற முடியும்; ஆனால் மோல்டோவாவுக்கு அதற்கான வாய்ப்பில்லை. எனவே, உக்ரைனின் இந்த முடிவால் அந்த நாடு மிகப் பெரிய எரிபொருள் பற்றாக்குறையைச் எதிா்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026