பாரிய தாக்குதலுக்கு தயாராகும் உக்ரைன் - கடலடிக் கம்பிவடங்களை குறிவைக்கும் ரஷ்யா!
உக்ரைனுக்கு திறன்வாய்ந்த ஆயுதங்கள் தேவை என அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் (Volodymyr Zelenskyy) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம், திடீர் பயணமாக உக்ரைன் அதிபர் பின்லந்து சென்றுள்ளதுடன், நோர்டிக் (Nordic) நாடுகளின் ஐந்து தலைவர்களை அதிபர் ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்ளார்.
உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தவும், நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இணைக்கும் முயற்சியைத் துரிதப்படுத்தவும் இந்த சந்திப்பு உதவும் எனக் கூறப்படுகின்றது.
தற்காப்பு தாக்குதல்
ரஷ்யப் படையினரை எதிர்த்து பெரிய அளவில் தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வருகின்றது.
இதற்கு உதவியாக பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.
உக்ரைனின் தற்காப்பு தாக்குதல் தொடங்கியுள்ளதை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் திட்டம்
இந்த சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா கடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தலாம் என நேட்டோ உளவுத்துறைத் தலைவர் டேவிட் கேட்லர் (David Cattler) எச்சரித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கடலடிக் கம்பிவடங்கள் உள்ளிட்ட முக்கியமான கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
