உக்ரைன் ரஷ்யா போர் - அதிர்ச்சியளிக்கும் சேத விபரம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்தப்போரை நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மாறாக இரண்டு நாடுகளும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துவதால் பாரிய உயிர் மற்றும் உடமை சேதமே ஏற்பட்டு வருகிறது.
இந்த 18 மாதகால போர் நடவடிக்கையில் இரு தரப்பிலும் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இதன்படி உக்ரைன் தரப்பில் மட்டும் சுமார் 70,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 100,000 முதல் 120,000 வீரர்கள் வரை காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய இராணுவ வீரர்களின் இழப்பு
ரஷ்ய தரப்பை பொறுத்தவரை 120,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 100,000 முதல் 180,000 வரையிலான வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் 9000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 16,000 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 11 சதவீத இடங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கிரிமியாவுடன் சேர்த்தால் மொத்தம் 17.5சதவீத இடங்களை அதாவது உக்ரைனின் 41,000 சதுர கி.மீ இடங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இடப்பெயர்வு
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையால் 5.9 மில்லியன் உக்ரைனிய மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக குடியேறியுள்ளனர்.
5 மில்லியன் மக்கள் உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர், அத்துடன் தற்போதைய நிலவரப்படி 17.9 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறது.
