உடனடியாக வெளியேறுங்கள் - சுவிஸ்சர்லாந்தில் இருந்து கடும் வார்த்தைகளால் விடுக்கப்பட்ட கண்டனம்!
உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முன்னைய நிலைமைக்குத் திரும்பவேண்டும் என்று சுவிஸ்சர்லாந்து அரசாங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளது.
அதேவேளை ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா முதலான பகுதிகளிலிருந்தும் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமெனவும் சுவிஸ்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உக்ரைனிற்குள் ஊடுருவியுள்ள ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து, உடனடியாக ரஷ்யப் படைகள் உக்ரைனிலிருந்து வெளியேறவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவை கண்டிக்கத் தயங்கிய சுவிஸ்சர்லாந்து
நடுநிலை நாடு என அறியப்படும் சுவிஸ்சர்லாந்து, ரஷ்ய ஊடுருவல் குறித்து முதலில் கருத்துத் தெரிவிக்கத் தயங்கியது.
ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ரஷ்யா மீது பல தடைகள் விதித்து வருகின்றது.
இந்நிலையிலேயே சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

