இலக்கு மாறிய ரஷ்ய படைகள் - நேட்டோவிடம் சிக்கிய தகவல்
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டு பொதுமக்களையும் குறிவைப்பதாக நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் இராணுவ நிலைகளே தமது இலக்கு எனக் கூறிவரும் நிலையில், இதுதொடர்பில் நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
“இந்தப் போரை பரப்புவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். ரஷ்யா சண்டையை உடன் நிறுத்த வேண்டும்.
உக்ரைனுக்கு வெளியே இந்த போர் பரவாமல் தடுப்பது எம் கடமை.
எங்களின் கூட்டணி நாடுகளின் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல் பொதுமக்களுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்தப் போரின் மனிதநேய விளைவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும் துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
