நூறு ரஷ்யப் படையினரை கொன்றொழித்த உக்ரைன்!
உக்ரைனில் உள்ள டான்பாஸ்(Donbas) நகரில் இரு தரப்பிற்கும் இடையே யுத்தம் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
இதில் ரஷ்ய இராணுவ வீரர்கள் நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆறு இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் அனைத்து நகரங்களின் மீதும் வான்வெளி மற்றும் தரை வழியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் இராணுவமும் ஈடுகொடுத்து வருகிறது.
இதனிடையே, உக்ரைனின் வடக்கு ரிவ்னே மாகாணத்தில் தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷ்யப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ரிவ்னே மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க் நகரில் குடியிருப்புப் பகுதி மீது உக்ரைன் ஏவுகணை தாக்கியதாகவும், இதில் பொதுமக்கள் இருபது பேர் கொல்லப்பட்டதுடன், இருபத்தியெட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
