உக்ரைன் மீது 900 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்! (காணொலி)
உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கி கடந்த மூன்று வாரங்களில் அந்நாட்டின் மீது சுமார் 900-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 20 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெயர் வெளியிடாத நிலையில் பேசிய சிரேஷ்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, வார இறுதியில் சிறிது முன்னேற்றம் அடைந்த பிறகு ரஷ்ய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்களின் பெரிய கான்வாய் கீவின் மையத்திலிருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 900 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளன. ஆனால் உக்ரைனின் வான்வெளி இன்னும் சவால் வாய்ந்ததாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களையும், மற்றும் பல செய்திகளையும் தாங்கி வருகிறது இன்றைய முக்கிய செய்திகள்.
