உக்ரைனின் ஆவேச தாக்குதல்! ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்?
உக்ரைன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தளபதி கார்கிவ் அருகே நடந்த சண்டையின் போதே கொல்லப்பட்டுள்ளார். ஆயினும் ரஷ்ய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் ஏதும் இன்னும் தெரிவிக்கவில்லை.
சம்பவத்தில் ரஷ்யாவின் மத்திய 41 ஆவது இராணுவத்தின் முக்கிய ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் முதல் துணைத் தளபதியே கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கொல்லப்பட்டவர் விட்டலி ஜெராசிமோவ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது தாக்குதல்களின்போது ரஷ்யாவின் பல மூத்த இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஜெராசிமோவ் இரண்டாவது செச்சினிய போரிலும் சிரியாவில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றதாகவும் உக்ரைனிய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
