இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம்: ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
இந்தியா (India) எப்போதும் உக்ரைனின் (Ukraine) பக்கம் இருக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா (Russia) தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மற்றும் சீனா போன்றவை கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கச்சா எண்ணெய்
இந்தநிலையில், உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இந்தியா மற்றும் சீனா நிதியளிக்கின்றனர் என்ற விடயத்தையும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஜெலன்ஸ்கி ஊடகங்களுக்கு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அணுகுமுறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கின்றது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சீனா விரும்புவதாக நான் நினைக்கவில்லை.
அதேநேரத்தில் டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதியின் அணுகுமுறையை மாற்ற முடியும் என்று நாம் நினைக்கின்றோம்.
ஐரோப்பியர்கள்
ஐரோப்பியர்கள் இந்தியர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
ரஷ்ய எரிசக்தித்துறை குறித்த தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ளும் என்பது எனக்கு தெரியும்.
சீனாவிடம் இருந்து இதே போன்ற நிலைப்பாட்டை எதிர்ப்பார்க்க முடியாது, சீனாவை பொறுத்தவரை இது மிகவும் கடினம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
