ரஷ்யாவிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : இரண்டு கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
ரஷ்யாவின் பெரிய தரையிறங்கும் கப்பல்களான யமல் மற்றும் அசோவ், ஒரு தகவல் தொடர்பு மையம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை வெற்றிகரமாக தாக்கியழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் வெளியிட்ட தகவலில்,
"பாதுகாப்புப் படைகள் யமல் மற்றும் அசோவ் தரையிறங்கும் கப்பல்கள், ஒரு தகவல் தொடர்பு மையம் மற்றும் ரஷ்ய கருங்கடல் கடற்படைக்கு சொந்தமான பல உள்கட்டமைப்பு வசதிகளை வெற்றிகரமாக தாக்கியுள்ளன."
யமல் போலந்தில் வடிவமைக்கப்பட்டது
யமல் 1987 இல் போலந்தில் வடிவமைக்கப்பட்டது. இது 98 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்வதுடன் 112.5 மீட்டர் நீளமுடையதாகும்.
அசோவ் நீர்மூழ்கி எதிர்ப்பு
அசோவ் 112 மீட்டர் நீளம் மற்றும் 87 பணியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி