கோட்டாபயவுக்கு எதிரான அறிக்கை ஐ.நா வில் சமர்ப்பிப்பு! உருவாகிய புதிய சிக்கல்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சூகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கோட்டாபயவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது விசாரணை அறிக்கை இதுவாகும்.
18 முன்னாள் இராணுவ அதிகாரிகளை அரச நிர்வாகத்திற்கு நியமித்ததன் மூலம் அரச சேவையை இராணுவமயமாக்கியதாகவும் கோட்டாபய மீது யாஸ்மின் சூகா குற்றம் சுமத்தியுள்ளார் என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்