பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை!
சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரால் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது மினுவாங்கொடை, பொல்வத்த, ஜபால இறப்பர் தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் இருவரின் சடலங்களை அவர்களது உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த மரணங்கள் தொடர்பில் மினுவாங்கொடை மாவட்ட நீதிவான் ஹேஷாந்த டி மெல் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கம்பஹா சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கம்பஹா வைத்தியசாலைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், கம்பஹா சட்ட வைத்திய அதிகாரி கே.எம்.டி.பி. கடந்த 20ஆம் திகதி இரு சடலங்களின் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
