காற்றின் தரக் குறியீட்டில் மாற்றம்: மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!
கொழும்பு (Colombo) உட்பட நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் சுவாசிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization) அறிவித்துள்ளது.
காற்றின் தரச் சுட்டெண்
நேற்றையதினம் (07.11.2024) கொழும்பு மற்றும் கண்டி (Kandy) நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் (Kurunegala) 118 முதல் 126 வரையிலும் காணப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை (Kegalle), இரத்தினபுரி (Ratnapura), எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு (Batticaloa), களுத்துறை (Kalutara), அம்பாந்தோட்டை (Hambantota) மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |