போதை பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!
கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கைது நடவடிக்கை நேற்று (13-07-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே மேற்படி மாணவன் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |