ரிஷி சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்குக் கிடைத்த வெற்றி - சந்திரிகா பெருமை!
Chandrika Kumaratunga
Prime minister
Sri Lanka
United Kingdom
Rishi Sunak
By Kalaimathy
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள, ரிஷி சுனக்கிற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துத் தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பிரித்தானியாவின் ஜனநாயகத்தின் சிறப்பு

சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி