உண்மையையும் நீதியையும் அடைய ஐ.நா தலையிட வேண்டும் - ஐ.நாவில் சர்வதேசத்திற்கான நினைவூட்டல்!

Human Rights Council United Nations Geneva Sri Lanka OHCHR
By Kalaimathy Sep 23, 2022 06:36 AM GMT
Report

காணாமல் போன கணவருக்காக சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், சிறிலங்கா குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்காத நாடு என சர்வதேச சமூகத்திற்கு முன் தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் சந்தியா எக்னலிகொட, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

"இன்று நீங்கள் காணும் எனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு ஆடைகள், நான் குற்றவியல் சக்திகளுக்கு தண்டனை கிடைக்காத, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் என்ற செய்தியை உங்களுக்கு வழங்குகிறது.

முடிவில்லாத போராட்டத்தில் சந்தியா எக்னெலிகொட

உண்மையையும் நீதியையும் அடைய ஐ.நா தலையிட வேண்டும் - ஐ.நாவில் சர்வதேசத்திற்கான நினைவூட்டல்! | United Nation Human Rights Session 51 Eknaligoda

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட எனது கணவர் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்க ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் முடிவில்லாத போரில் ஈடுபட்டதோடு, வடக்கில் தாய்மார்களின் முடிவற்ற போராட்டம் குறித்து குரல் எழுப்பினேன்.

என்னைப் போன்று காணாமல் போன தமது உறவுகளை தேடி வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தாய்மார்கள் நாடு பூராகவும் உள்ளனர். வடக்கில் தமிழ் தாய்மார்கள் போராடி வருகின்றனர்.

என்னைப் போலவே, அவர்களும் காவல்துறை போன்ற பல அரசு நிறுவனங்களுடன் மோதுகிறார்கள், கடந்த நான்கு தசாப்தங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு ஆணைக்குழுவும் காணாமல் போனவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ நீதி வழங்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு நினைவுபடுத்துகின்றேன்.

பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் அடைய நம்பக்கூடிய ஒரு சட்டப் பொறிமுறையைப் பெறுவதற்கு ஐ.நா தலையிட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தைரியத்திற்கான விருது

உண்மையையும் நீதியையும் அடைய ஐ.நா தலையிட வேண்டும் - ஐ.நாவில் சர்வதேசத்திற்கான நினைவூட்டல்! | United Nation Human Rights Session 51 Eknaligoda

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், இலங்கையில் நடந்த போரிலும் முந்தைய கிளர்ச்சிகளிலும் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் சர்வதேச தைரியத்திற்கான விருது வழங்கப்பட்டது.

காணாமல் போன தனது கணவர் பிரகித் எக்னலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர, அதிகாரிகளின் தடைகளையும் மீறி எண்பது தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே அவருக்கு இந்த விருது கிடைத்தமைக்கு காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ ஷெனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011