உலக சந்தையில் குறைந்தும் இலங்கையில் குறையாத எரிபொருள் விலை - அரசு மீது கடும் அதிருப்தி
Sri Lanka
Kanchana Wijesekera
Gemunu Wijeratne
Sri Lanka Fuel Crisis
By Jaso
அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நாட்டில் எரிபொருளின் விலை குறையவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப நாட்டில் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் பதினைந்தாம் திகதிகளில் திருத்தம் செய்யப்படும் என துறைக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனவே பொறுப்பான அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி அதனை செயற்படுத்தவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி