ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு
ஏமன் (Yemen) தலைநகரில் அமெரிக்கா (United States) நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (14.04.2025) ஏமன் தலைநகரில் அமெரிக்காவின் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானம்
மேலும், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ஹவுதி குழு தெரிவித்துள்ளது.
வான்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை ஹவுதி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.
கடந்த 2023ஆம் நவம்பர் மாதத்தில் இருந்து 100-க்கும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
