பாகிஸ்தான் இராணுவ தளபதி கோட்-சூட் போட்ட ஒசாமா பின்லேடன் : அமெரிக்காவில் கடும் விமர்சனம்
பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் முனிரை கோட்-சூட் போட்ட ஒசாமா பின்லேடன் என அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மைக்கல் ரூபின் சாடியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள அசீம் முனிர், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது, அணு ஆயுத நாடான பாகிஸ்தானை வீழ்த்த நினைத்தால் பாதி உலகை அழித்துவிடுவோம் என தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்
அசீம் முனிர் I.S பயங்கரவாதியைப் போல் பேசுவதாகவும், அமெரிக்காவுக்குள் நுழைய அவருக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மைக்கல் ரூபின் குறிப்பிட்டார்.
சரிந்துவரும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை அதன் போக்கில் அழிந்துபோக உலக நாடுகள் விட்டுவிட வேண்டும் எனவும், அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அணு ஆயுதங்களை கைப்பற்றிவிட வேண்டும் எனவும் மைக்கல் ரூபின் கூறினார்.
ரவுடி நாடு போல செயல்படுகிறது பாகிஸ்தான்
குறைபாடு கொண்ட கண்ணாடி மூலம் பயங்கரவாதத்தை அமெரிக்கர்கள் பார்க்கின்றனர். பல பயங்கரவாதிகளின் அடித்தள சித்தாந்தங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவிலலை. பாகிஸ்தான் ரவுடி நாடு போல செயல்படுகிறது. அமெரிக்க மண்ணில் இருந்து பாகிஸ்தான் மிரட்டல் விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
