எல்லையை கடக்க முயன்ற இந்தியர்கள் கனடா எல்லையில் சடலமாக மீட்பு!
United States of America
Canada
By pavan
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த இந்தியர்கள் உள்பட 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் இந்தியா மற்றும் ரோமேனியா நாடுகளை சேர்ந்த 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர்.
தேடும் பணிகள்
இந்த சம்பவத்தில் இந்திய குடும்பத்தினர் உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. அந்த குழந்தையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி