ஹவுதிகளுக்கு நெருங்கும் அழிவு: நேரடி களத்தில் அமெரிக்கா!
யேமனில் உள்ள ஹூதி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆயுதங்களை தயார் செய்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்போது, USS Harry S Truman விமானம் தாங்கி கப்பலில் இருக்கும் மாலுமிகள் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தாக்குதல்கள்
ஹவுதியின் செய்தித் தொடர்பாளர், சனிக்கிழமையன்று எதிர்தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் F-18 ஜெட் விமானத்தை வீழ்த்தியதாகக் கூறினார்.
Sailors aboard the USS Harry S. Truman (CVN 75) prepare ordnance for strikes against Houthi targets in Yemen. pic.twitter.com/pnVMYnzpjs
— U.S. Central Command (@CENTCOM) December 23, 2024
மறுபுறம், இந்த சம்பவம் "நட்புத் தீ" என்றும், சனிக்கிழமை இரவு யேமன் தலைநகரில் பல இலக்குகளைத் தாக்கியதாகவும் அமெரிக்காவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |