அமெரிக்காவில் மர்ம நபர்கள் தாக்குதல் - 12 பேர் படுகாயம்
United States of America
By Vanan
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பிலடெல்பியா மாகாணத்தின் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே மர்ம நபர்கள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
மர்ம நபர்கள் தாக்குதல்
இத்துப்பாக்கி சூட்டில் 12 பேர் வரை படுகாயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை தெரியவராத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்