ட்ரம்ப் அதிரடி : ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியது அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து அமெரிக்காவை (us)விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துள்ளார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதும், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியதும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும்.
ட்ரம்ப் எடுத்த முடிவு
இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
[VISBLK[
தனது முதல் பதவிக் காலத்தில், ஜூன் 2018 இல், ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்க நடவடிக்கை எடுத்தார். ஏனெனில் அந்த அமைப்பு பொருத்தமற்ற நாடுகளுக்கு தங்குமிடம் வழங்குவதாகவும், இஸ்ரேல்(israel) மீது தொடர்ந்து விரோதப் போக்கைக் காட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா நிறுவனத்திலிருந்தும் வெளியேற்றம்
இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா மீண்டும் பார்வையாளராக இணைந்தது.
இதற்கிடையில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (UNRWA) நிதியுதவியை நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். காசா பகுதி, மேற்குக் கரை, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் இந்த அமைப்பு 1950 இல் நிறுவப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |