ஈரானை நெருங்கிய அமெரிக்கா! ஹவுதி வெளியிட்ட எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதற்கேற்ப, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ஈரானை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.
ஹவுதியின் தாக்குதல்கள்
இதனை உறுதிப்படுத்தும் வகையில், செங்கடலில் கப்பல்களை தாக்கியதாக கூறப்படும் பழைய தாக்குதல் காணொளிகளை ஹவுதி அமைப்பு வெளியிட்டு, அதில் “Soon” (விரைவில்) என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

Image Credit: POLITICO
ஆனால் தாக்குதல் தொடர்பான விரிவான விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹவுதி கிளர்ச்சிக்குழு கடந்த காலங்களில் செங்கடல் வழியாக சென்ற 100-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் வர்த்தக கப்பல்களை தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |