இந்திய எல்லைகளில் நிலவும் போர்ப் பதற்றமும் - அமெரிக்காவின் தலையீடும்!
இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையே போர் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் 2023 ம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தொடரும் வன்முறை மற்றும் அமைதியற்ற சூழல், இரு பக்கத்திலும் அதிகரித்து வரும் பதற்றங்களால் நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் இராணுவப் படை பதிலடி கொடுக்கும் வல்லமையுடன் தற்போது காணப்படுவதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பினை அதிகரிக்கும் சீனா
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, இந்தியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பினை அதிகரிக்கும் சீனா தொடர்பிலும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் ஊடாக எல்லை விவகாரத்தில் தீர்வு காணப்பட்டாலும், எல்லைப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றநிலை நிலவுகிறது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் பாதிக்கும் சூழலை உருவாக்குகிறது.
அமெரிக்காவின் தலையீடு
அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் தமது எல்லைகளில் படைகளை குவித்து வருவது மேலும் பதற்றத்தை தோற்றுவிப்பதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்ந்தால், அமெரிக்காவின் உதவி கோரப்பட்டு, அமெரிக்காவை தலையிட அழைக்க வேண்டி ஏற்படும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் வருங்காலங்களில் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
