விடுதலையான ஈழத்தமிழர்களை திருச்சி சிறப்பு முகாமில் அடைப்பது அநீதி -வன்னியரசு கண்டனம்
Rajiv Gandhi
Tamil nadu
Supreme Court of India
By Sumithiran
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்தவர்களை உச்சநீதிமன்றமே விடுதலை செய்த பிறகும் அவர்களை திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வது அநீதியாகும் என வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச் செயலாளர் வன்னியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விடுதலை காற்று சுவாசிக்கட்டும்
உச்சநீதிமன்றமே விடுதலை செய்த பிறகும் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வது அநீதியிலும் அநீதியாகும்.
அவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வதை முதல்வர் ஸ்டாலின் தடுத்து, அவரவர் விரும்பும் இடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும். விடுதலை காற்று சுவாசிக்கட்டும்! இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்