எப்போது விழும் மேற்கூரை -ஹெல்மெட் அணிந்தபடியே வேலை செய்யும் ஊழியர்கள்(காணொளி)
அரச அலுவலகம் ஒன்றின் மேற்கூரை எப்போது விழுமென நாளாந்தம் பயந்து பயந்து பணிபுரியும் ஊழியர்கள் தமது சுய பாதுகாப்பை முன்னிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வருகிறது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் பாரவுத் நகரில் உள்ள மாநில மின் துறையின் கட்டடம் பழுதடைந்துள்ளதால், பொறியாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டடத்திற்குள் பணிபுரியும் போது ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்காத்துக் கொள்ள ஹெல்மெட்
காணொளியில் கணனியை இயக்கும் ஊழியர் ஒருவர் "எப்போது மேற்கூரையிலிருந்து பிளாஸ்டர் விழுந்து காயமடைவோம் என்று தெரியாததால், எங்களை தற்காத்துக் கொள்ள ஹெல்மெட் அணிந்து வருகிறோம். கடந்த காலங்களில் தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. பெரிய விபத்து எதுவும் நடக்கவில்லை என்றாலும், ஆபத்து அதிகம்," என்கிறார்.
வைரலாகும் காணொளி
#Baghpat
— Eyenews (@eyenewsup) February 27, 2023
दफ़्तर में 'हेलमेट' लगाकर रहते हैं कर्मचारी
हेलमेट पहनकर काम करते हैं विद्युतकर्मी
जर्जर भवन से टूटकर गिरता है लेंटर का मलबा
कई बार शिकायत के बाद भी नहीं हुआ समाधान
विद्युत प्रशिक्षणशाला का वीडियो हुआ वायरल.@BagpatDm @UPGovt pic.twitter.com/1OO7TZyzPc
"மழைக்காலத்தில் நிலைமை மோசமாகிறது, மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, மழைநீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது," என்கிறார்.
வார இறுதியில் தொழிலாளர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
