கோட்டாபயவுக்கு ஏற்பட்ட கதியே ரணிலுக்கும் - எச்சரிக்கும் வியாழேந்திரன்
சிறிலங்கா அரசாங்கத்தின் குழுக்களுக்கு நியமிக்கப்படுவோர் சமூக பொறுப்பற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட கதியே, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்படும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டாள்தனமான கொள்கை வகுப்பு
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “முட்டாள்தனமான கொள்கை வகுப்புகளால் அனைத்து அரசாங்கங்களும் தோல்வியை சந்தித்துள்ளது.
பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் செயற்படும் அனைத்து அதிபர்களும் இறுதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை கடந்த அரசாங்கங்கள் நன்கு கற்றுக் கொண்டுள்ளது” - என்றார்.
இறக்குமதி தடை
அத்தோடு, தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் நெருங்கும் நிலையில், தமிழ் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் உழுந்து, பயறு போன்ற தானியங்களை இலங்கை அரச பொது வர்த்தக கூட்டுத்தாபனம் ஊடாக இறக்குமதி செய்வதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான குழு தடையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
