கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை: இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு
Chennai
Pregnancy
Sri Lankan Peoples
India
World
By Dilakshan
அதிக வெப்பமான காலநிலையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இறந்த பிறப்புகள் மற்றும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று 2017 முதல் தற்போது வரை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வெப்பமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பணிபுரியும் 800 கர்ப்பிணிப் பெண்களைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தி போன்ற தொழில்களில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருச்சிதைவு
இந்நிலையில், அதில் 5 சதவீதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இறந்த பிறப்புகள் மற்றும் முன்கூட்டிய பிறப்புகள் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்