பெரும்பான்மையை வைத்து அநுர அரசு என்ன செய்ய போகின்றது..!
இதுநாள்வரை நடைபெற்ற தேர்தல்களில் கட்சிகள் வெற்றிபெற்றன. மக்கள் தோல்வியடைந்தனர். தற்போது நடைபெற்ற தேர்தலில் கட்சியும் வெற்றிபெற்று மக்களும் வெற்றியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வடக்கு மக்கள் இந்தகட்சி மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயக நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இருக்கவேண்டும்.தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் நலன் குறித்து சிந்திக்கின்ற ஒரு இயக்கம்.நாட்டின் வளர்ச்சி,நாட்டை எப்படி கட்டியெழுப்புவது என சிந்திக்கின்ற ஒரு இயக்கம்.
எனவே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற அதிகாரத்தை வைத்து நாம் நிச்சயமாக தவறாக பயன்படுத்தமாட்டோம்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தகா ஐன்ஸ்ரின் தெரிவித்தார். லங்கா சிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |