ஈரான் அதிபர் மரணத்திற்கு முன்னர் CIA தலைவர் மத்திய கிழக்கில் என்ன செய்து கொண்டிருந்தார்?
பொதுவாகவே ஒருவர் கொல்லப்பட்டால், இரண்டு முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுவது வளக்கம்.
முதலாவது - கொல்லப்பட்டவருடைய பிரதான எதிரிகள் யார் என்கின்ற கேள்வி..
இரண்டாவது - அந்த நபர் கொல்லப்படுவதனால் யார் அதிக நன்மை அடைகின்றார்கள் என்கின்ற கேள்வி.
கொல்லப்பட்ட ஈரான் அதிபர் விடயத்தில், இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் அமெரிக்காவும், இஸ்ரேலும் முதன்மையாக வந்துவிடுகின்றன.
ஏனென்றால் அமெரிக்கா- இஸ்ரேல் இந்த இரண்டு நாடுகளுக்கும் எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வந்தவர் தான் ஈரான் அதிபர்.
அத்தோடு; இந்த இரண்டு நாடுகளினதும் மத்தியகிழக்கு நலன்களுக்கு எதிரான ஒரு மிகப் பெரிய தடைக்கல்லாக ஈரானிய அதிபர் அங்கு செயற்பட்டுவந்தவர் என்பதும் யாவரும் அறிந்த விடயம்.
எனவே கொல்லப்பட்ட ஈரான் அதிபரின் முதன்மை எதிரிகளும் அமெரிக்கா இஸ்ரேல்தான். அவரது மரணத்தினால் நம்மை அடையப்போகின்றவர்களும் அமெரிக்கா இஸ்ரேல்தான்.
இப்படியான நிலையில், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அமெரிக்க உளவு அமைப்பான CIA இன் தலைவர் William J. Burns பல தடவைகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தை அடிப்படையாக வைத்து சந்தேகத்தை எழுப்புகின்றார்கள் சில ஆய்வாளர்கள்.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |