பூமி மாறி சுழன்றால் என்ன நடக்கும்..! விஞ்ஞானிகளின் கணிப்பு
நமது பூமி தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
தன்னை தானே சுற்றும் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது.
ஒருவேளை நாம் வாழும் பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றினால் என்ன ஆகும் தெரியுமா? இதற்குரிய பதிலை விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
பூமி சுழல்வதால் என்ன பயன்
பூமி சுழல்வதால் என்ன பயன் இருக்கிறது? அதாவது சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கொள்ள உதவுகிறது.
சூரிய ஒளி வெளிச்சத்தை மட்டும் எமக்கு வழங்குவதில்லை, அவை புற ஊதாக்கதிர்கள் போன்றவற்றையும் சேர்த்து வெளியிடுகின்றன.
இந்த கதிர்கள் எமக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது, இப்படி இருக்கையில் பூமி சுற்றுவதால் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு என பூமியின் வெப்பமும், குளிரும் சமநிலை அடைகிறது.
அதேசமயத்தில், பூமியின் காலநிலை, பருவ மழை, கடல் நீரோட்டம் எல்லாமே இந்த சுழற்சியை மையப்படுத்தியே உள்ளது.
சுழற்சி மாற்றம்
ஆகவே பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றினால் கடல் நீரோட்டம் தலைகீழாக மாறும்.
கடல் நீரோட்டம் என்பது ஒவ்வொரு கண்டத்தின் வெப்பநிலையை தீர்மானிக்கிறது.
எனவே பூமி மாறி சுற்றினால், அட்லாண்டிக் கடலில் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் பசுபிக் கடலில் நடக்கும் என ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ஆப்பிரிக்காவில் உள்ள மழைக் காடுகள் முழுவதும் பாலைவனமாக மாறும்.
அதேசமயத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும் ரஷ்யா ஆசியாவில் உள்ள இலங்கை, இந்திய நாடுகளை போல வெப்பமண்டல காடுகளாக மாறும். அங்கு அதிக அளவில் காடுகள் உருவாகும்.
காந்த புலம்
இன்னுமொரு முக்கிய விடயம், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல வேண்டுமாயின் முதலில் பூமியின் சுழற்சி நிற்க வேண்டும்.
பூமி சுழற்சி நின்று தான் மாறி சுழல ஆரம்பிக்கும். பூமி தொடர்ச்சியாக சுழல்வதால்தான் பூமியில் காந்த புலம் உருவாகிறது.
இந்த காந்த புலம்தான் சூரியனிலிருந்து வெளி வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கிறது.
இப்படி இருக்கையில் பூமி நின்றுவிட்டால் இந்த காந்த புலங்கள் இருக்காது. பூமிக்கு மிக முக்கியமான இந்த காந்த புலம் இல்லையெனில் உயிர்கள் அழிய தொடங்கிவிடும்.
ஒக்சிசன்
இருப்பினும் மீண்டும் பூமி மாறி சுற்ற ஆரம்பித்து, காந்த புலம் மீண்டும் வந்துவிட்டால், கடலில் உள்ள பைட்டோ பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து, சைனோ பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.
பூமியின் பெரும்பாலான ஒக்சிசன் தேவையை அமேசான் காடுகள் பூர்த்தி செய்வதில்லை.
இதனை பைட்டோ பாக்டீரியாதான் பூர்த்தி செய்கிறது, இந்த சைனோ பாக்டீரியா மேலும் தூய்மையான ஒக்சிசனை உருவாக்கும்.
தூய்மையான ஒக்சிசன் மனிதனின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
