திடீரென மயக்கம் ஏற்பட காரணம் என்ன
சிலருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதும் சிலருக்கு மயக்கம் நீண்ட நேரமாக இருக்கும் என்பதுவும் பலரை பதற வைக்கும் நிகழ்வாகவே உள்ளன.
இப்படி மயக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
பல்வேறு காரணங்கள்
இதயத்துடிப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, இரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயக்கம் வர வாய்ப்பு உண்டு என்றும் அதேபோல் மது அருந்துவது போதைப் பொருளுக்கு அடிமை ஆவது ஆகியவையும் மயக்கம் வர காரணம் என்றும் கூறப்படுகிறது.
மயக்கத்தில் இருப்பவர்கள் சிலருக்கு இமை திறந்தால் கூட விழிகள் அங்கும் இங்கும் சுழலும் என்றும் மயக்கம் ஏற்பட்ட பிறகு உடனடியாக உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மயக்கத்தை தவிர்க்க
பதட்டம், பயம் போன்ற உளவியல் காரணங்களும் மயக்கம் வருவதற்கு காரணம் என்றும் மயக்கத்தை தவிர்க்க தியானம் மற்றும் யோகாசனத்தை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.