போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா!

Sri Lankan Tamils Tamils Children's Day Sri Lanka
By Theepachelvan Oct 02, 2024 07:19 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

பன்னாட்டுச் சிறுவர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகமெங்கும் சிறுவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஊடகங்களின் கவனங்களை ஈர்த்திருக்கிறது.

இனப்படுகொலைப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே என்றும் அவர்களுக்கான நீதி எங்கே என்றும் சிறுவர்கள் கேள்வி எழுப்பி தமிழர் தாயகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வ்வுனியா மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் போரில் இழைக்கப்பட்ட அநீதகளுக்கான நியாயங்கள் வேண்டி சிறுவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தை சிறிலங்காவும் (Srilanka) உலகமும் கண்விழித்து இனியாவது பார்க்குமா? செவிகொடுத்துக் கேட்குமா?

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை…

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை…

ஈழத்தில் போராடும் குழந்தைகள்

ஈழ நிலத்தில் குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விசயமாகிறது.

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா! | Where Are Sri Lanka S Missing Kids Srilankan War

அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மிரட்டுகின்றன. அவர்களைத்தான் சூனியமான எதிர்காலம் அச்சுறுத்துகிறது. எங்கள் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை.

அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது. எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள அரசு படைகளின் குண்டுகளால், விமானங்களால் பிய்த்தெறியப்பட்டனர்.  

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த அப்பாவிக் குழந்தைகளை சிங்கள இராணுவம் கொலை செய்து அழித்தது. அவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இரத்தம் அவர்களின் கண்ணீர் இந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கவில்லை.

ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய போரால் எங்கள் குழந்தைகள் இடர்மிக்க காலத்தை சந்தித்துள்ளனர்.

கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் !

கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் !

தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள்

இன்றைக்கு எங்கள் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்கள் சிலவற்றுக்குச் செல்கிறபோது எத்தனை தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை சந்திக்க முடிகிறது.

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா! | Where Are Sri Lanka S Missing Kids Srilankan War

தாய் தந்தையர்களை குழந்தைகள் இழப்போடு அவர்கள் மாபெரும் தனிமைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் பேரன்பை இழக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் வேறு ஒரு திசையில் செல்கிறது.

இட்டு நிரப்ப முடியாத அந்த இடைவெளி அவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  சிறுவர் இல்லங்கள் அவர்களுக்கு சிறைக்கூடங்களாகின்றன. அம்மா தரும் அன்பை அப்பா தரும் அரவணைப்பை சகோதரர்கள் கூடியிருக்கும் வாழ்வை யாரால் தர இயலும்? அந்த வாழ்வில் இருக்கும் ஆறுதலை இனிமையை எப்படித் தர இயலும்.

வாடிய முகங்களுடன் ஏக்கங்கள் நிறைந்த மனத்தோடு பிஞ்சு வயதிலேயே மன நெருக்கடிகள் நிறைந்து வாழும் ஒரு வாழ்க்கைக்கு எங்கள் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான சிறுவர் இல்லங்கள் என்றில்லாமல் சிறுவர் இல்லங்களுக்கான குழந்தைகளாக அவர்களின் சூழல் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்தில் குழந்தை தொழிலாளிகள்

தந்தையை இழந்து, தாயை இழந்து அன்பும் ஆதரவுமற்று அனாதரவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொழிலாளிகளாக நடத்தப்படுகிறார்கள். பக்கத்து வீட்டிலிருந்து வணிக நிறுவனங்கள் வரை வடக்கில் தொழிலாளிகளாக குழந்தைகள் நடத்தப்படுவதைக் காணலாம்.

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா! | Where Are Sri Lanka S Missing Kids Srilankan War

தாய் இறந்துபோக தந்தையார் செய்து கொண்ட மறுமணத்தின் ஊடாக கிடைத்த மாற்றுத் தாயே பாடசாலையை இடைவிலக்கி குழந்தைகளை தொழிலாளிகள் போல நடத்துவதையும் காணமுடிகிறது. இவ்வாறு குழந்தைகள் குடும்பங்களில், வீடுகளில் முகம்கொடுக்கும் சிக்கல்கள் ஏராளம்.

வடக்கில் பல பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் முழுக்க முழுக்க அபாயம் மிக்க சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆறு வருடங்களாக இராணுவத்தாலும் சிவிலியன்களாலும் சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவங்கள் பல வடக்கில் பதிவாகியுள்ளன.

எவரும் சட்டத்திற்கு முன்னால் தண்டிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது பாலியல் துஷ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இராணுவத்தின் இனவெறிப் பாலியல் துஸ்பிரயோகங்கள் சிவிலியன்களுக்கும் தூண்டுதலாக அமைகிறது.

போதைப் பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை இன்று ஈழச் சிறுவர்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா! | Where Are Sri Lanka S Missing Kids Srilankan War

பல சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்பட்டு பாடசாலைகளைவிட்டு இடைவிலகி தமது எதிர்காலத்தை சூனியமாக்கியுள்ளனர். காவல் நிலையங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு போதைப் பொருள் காவுவதற்கு சிறுவர்கள் உபயோகப்படுத்தும் செயல்கள் ஊடகங்களில் வெளியாக்கப்பட்டிருந்தது. இவைகளுக்கு என்ன காரணம்?

எங்கள் சிறுவர்களின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு அவர்களின் தாய் தந்தையர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டு அவர்களின் தந்தையர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்கள் அனாதரவாக்கப்பட்டு அவர்கள் பாடசாலை கல்வியை இழந்து இராணுவ ஆக்கிரமிப்பும் அபாயமும் மிகுந்த சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளமை எதற்காக?

இப்படி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் சிறுவர்களுக்கு இந்த மண்ணில் என்ன உரிமை இருக்கிறது? சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எங்கள் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுதல்

முதலில் எங்கள் சிறுவர்களை உங்கள் திட்டமிட்ட செயற்பாடுகளிலிருந்து விடுதலை செய்யுங்கள். எங்கள் சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுவதுதான் அவர்களுக்கு வேண்டிய முதல் உரிமை.அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை.

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா! | Where Are Sri Lanka S Missing Kids Srilankan War

எங்கள் சிறுவர்கள் தங்கள் பராயத்தில் தாங்களாக வாழ அனுமதியுங்கள். உரிமை பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எல்லாமும் பறிக்கப்பட்ட எங்கள் சிறுவர்கள் இலங்கையில் ஈழச் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை குறித்து இந்த உலகின் முன் நீதியை கோரி முகத்தில் அறைகின்றனர்.

சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் சமமாக நடாத்துதல் என்பதுதான் 2024ஆம் ஆண்டு சிறுவர் தினத்தின் தொனிப்பொருள். ஈழ நிலத்தில் பிறந்த சிறுவர்கள் சம உரிமையாக நடாத்தப்படுகிறார்களா என்பது ஒரு பெருத்த கேள்வி.

அதேபோல ஈழச் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதும் அத்தகையதொரு வினாவாகவே எழுந்து நிற்கிறது. அப்படியான சிறுவர் பாதுகாப்பும் சமத்துவ உரிமையும் இருந்திருந்தால் போரில் 60 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஒரு பெருந்தொகைச் சிறுவர்களை ஒரே தருணத்தில் காவு கொண்ட சிறிலங்கா அரசு சிறுவர் உரிமை கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் அதனைப் பற்றி பேசுவதும் உண்மையிலேயெ அர்த்தமில்லாத பொய்யான செயலாகவே இருக்கும்.

முதலில் வரலாற்றின் முள்ளாகிப் போன இந்த விடயத்திற்கு தீர்வு தாருங்கள். எங்கள் நிலத்தின் சிறுவர்களுக்கு பதில் கூறுங்கள்.

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள்

சிங்கள மக்களும் நேசிக்கும் திலீபன் : இனி எம் போராளிகளுடன் பேசுங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்